குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களை கையாளுதல் இலங்கை தமிழ் மொழியில் (Managing Queensland fruit fly, Tamil)

பதிவிறக்க: குயின்ஸ்லாந்து பழ ஈ (PDF - 765.0 KB)

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் தற்போது விக்டோரியா மாநிலத்தில் இனங்காணப்பட்டுள்ளன. அவை பழ மற்றும் மரக்கறிப் பயிர்களைப் பாதிக்கக்கூடியது. இந்த தகவல் தாள், குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் பற்றி அறிந்துக்கொள்ளவும் அவற்றிடமிருந்து உங்கள் பழங்களையும் மரக்கறிகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் உதவும்.

குயின்ஸ்லாந்தின் பழ ஈ பார்க்க எப்படி இருக்கும்?

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களின் வாழ்க்கை வட்டத்தில் நான்கு பருவங்கள் உண்டு. போதிய வெப்பநிலை (குறிப்பாக 26 ⁰C) கிடைக்கும் சூழலில் முட்டையிலிருந்து நிறையுடலியாக அதற்கு 30 நாட்கள் வரை எடுக்கும்.

முட்டை

குடம்பி

கூட்டுப்புழு

நிறையுடலி

இளவேனில், கோடை மற்றும் இளையுதிர் காலங்களிலும் நீங்கள் குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களை வீட்டுத் தோட்டத்தில் காணலாம்.

வீட்டுத்தோட்டங்களில் குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களின் வாழிடங்கள்

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் சாதாரணமாக பழங்களிலும் மரக்கறிகளிலும் முட்டையிடும் – அவை அவற்றின் ‘வாழிடங்களும்’ ஆகும். அவை வழமையாக வளரும் இடங்கள் பற்றிய எடுத்துக்காட்டுக்கள் பின்வருமாறு.

 ஆப்பிள், பாதாமி, வெண்ணெய், கேப்சிகம், மிளகாய், கும்காட், கத்தரிக்காய், அத்தி, திராட்சை, எலுமிச்சை, சுண்ணாம்பு, லோக்கட், நெக்டரைன், ஆரஞ்சு, பேஷன்ஃப்ரூட், பீச், பேரிக்காய், பெர்சிமோன், பிளம், மாதுளை, முட்கள் நிறைந்த பேரிக்காய், சீமைமாதுளம்பழம், ஸ்ட்ராபெரி, தக்காளி

வாழிடங்கள் குறித்த முழுமையான பட்டியல் இதோ Queensland fruit fly

வீட்டுத் தோட்டங்களில் குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களைக் கட்டுப்படுத்தல்

1. குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் உள்ளனவாயென ஆராயுங்கள்

பொறிகள்: குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களுக்கான பொறிகள் தோட்டத்தில் ஆங்காங்கே தொங்கவிடப் பட்டுள்ளதாயென ஆராயுங்கள். அருகிலுள்ள நிழலான மரமொன்றில் 1.5 மீட்டர் உயரத்தில் பொறிகளை கொளுவுங்கள். இளவேனில் காலத் தொடக்கத்தில் ஆரம்பித்து குளிர்காலம் வரை பொறிகளைக் கொளுவுங்கள்.

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களை கவரக்கூடிய, அதேபோல் பிடித்துக்கொள்ளும் பொறிகள் சந்தையில் பல உள்ளன. இந்தப் பொறிகள் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் சூழலுக்கு நன்மை விளைவிக்கும் பூச்சிக்களையும் சிலவேளை கவரச்செய்து அகப்படச் செய்யலாம். ஆகவே, குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களைத் தவிர வேறு ஏதேனும் பூச்சிகள் பொறியில் மாட்டுகின்றனவா என்பதை உறுதிசெய்துக் கொள்ளுங்கள்.

2. கட்டுப்பாட்டு முறைகள்

உங்கள் தோட்டத்தில் குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் இருக்குமென்றால், அவற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடு முறகளின் சேர்மானம் சிறந்ததாகும். பழங்கள் முற்ற 6-8 வாரங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு முறைகளை ஆரம்பியுங்கள். காரணம் அவை பிஞ்சு அல்லது கடினமான மேற்றோலைக் கொண்ட காய்களையும் துளைத்து முட்டையிடக் கூடியன.

தவிர்ப்பதே சிறந்தது்தது: பழங்கள் காய்த்தப் பின்னர் அவற்றை வலையிட்டோ பைகளிட்டோ உறைகளிட்டோ பாதுகாப்பதன் மூலம், காய்களைத் துளைத்து முட்டையிடும் குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களிடமிருந்து காப்பாற்றலாம். வலைகள் காய்களில் படாதவாறு போர்த்துங்கள்.

தவிர்ப்பதேசிறந்தது: பழங்கள் காய்த்தப் பின்னர் அவற்றை வலையிட்டோ பைகளிட்டோ உறைகளிட்டோ பாதுகாப்பதன் மூலம், காய்களைத் துளைத்து முட்டையிடும் குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களிடமிருந்து காப்பாற்றலாம். வலைகள் காய்களில் படாதவாறு போர்த்துங்கள்.

இறைகளும் பொறிகளும் பூச்சி நாசினிகளும்்ளும்: உங்கள் தோட்டத்திலுள்ள பழங்களை குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் சேதப்படுத்தும் முன்னர் அவற்றுக்கு பொறிகளையோ இறைகளையோ இடுங்கள். ஆண், பெண் ஆகிய இரண்டு பூச்சியினங்களையும் பிடிக்கும் பொறிகளை உபயோகியுங்கள். பழ ஈக்களைக் கட்டுப்படுத்த பொறிகள் மட்டும் போதாது.

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களை அழிக்கும் பூச்சிநாசினிகளும் உண்டு. பூச்சிநாசினிகள் ஆபத்தானவை. முறையாக உபயோகிக்காவிட்டால் பாதிக்கும் – உபயோகிக்கும் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை நன்கு வாசியுங்கள்.

தவரணைகளிலோ வீட்டுத்தோட்டங்களுக்கான மருந்துக் கடைகளிலோ இணைவழி விற்பனையாளர்களிடமிருந்தோ இவ்வனைத்து பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

3. உங்கள் பழங்களையும் மரக்கறிகளையும் சோதியுங்கள்

மேற்றோலில் கொட்டிய அடையாளங்கள் இருக்குமாயின், அவை பழங்கள் அல்லது மரக்கறிகளினுள் குடம்பிகள் இருப்பதற்காக அடையாளமாகும்.

மேற்றோலில் கொட்டிய அடையாளங்கள் இருக்குமாயின், அவை பழங்கள் அல்லது மரக்கறிகளினுள் குடம்பிகள் இருப்பதற்காக அடையாளமாகும்.

4. தோட்டத்துக்கான அடிப்படைப் பாதுகாப்பு (தூய்மை)

பழங்கள் முற்றியவுடன் பறித்து உட்கொள்ளக்கூடியதாக இருத்தல் அழுகிய நிலையிலுள்ள, கீழே விழுந்த மற்றும் நீங்கள் உட்கொள்ள விரும்பாத நிலையிலுள்ள எல்லா பழங்களையும் மரக்கறிகளையும் அகற்றுங்கள். இவ்வாறு செய்வதால் குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் பரவுவதைத் தவிர்க்கலாம்.

மரத்தின் கிளைகளை கழியுங்கள். அப்போது பழங்களைப் பறிக்க இலகுவாக இருக்கும். அதன்பிறகு பூச்சி வலைகளையோ மருந்துகளையோ இடலாம்.

பழங்களை எறியும முன்னர், அதிலுள்ள குடம்பிகளை அழித்தல் வேண்டும். அதற்காக குளிர்சாதனத்தில் இடவோ, நுண்ணலை வெப்பமாக்கியில்/கொதிக்கும் நீரில் இடவோ, சூரியவொளி படுமிடத்தில் வைக்கவோ (பழங்களை பொலித்தீன் பையில் நன்கு கட்டி வெயிலில் வைத்தல்) செய்யலாம். அவ்வாறு செய்தப்பின்னர் நீங்கள் அந்த பழங்களிடப்பட்ட பைகளை குப்பையில் இடலாம்.

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களால் சேதமான பழங்களையும் மரக்கறிகளையும் உரமாக்கமண்ணிலிடவேண்டாம்.

உங்களால் குறிப்பிட்ட பழ அல்லது மரக்கறித் தாவரங்களை காப்பாற்றிக்கொள்ள இயலாமல் போகும் என்று நீங்கள் எண்ணினால், குறிப்பிட்ட பழ ஈ வகையால் பாதிப்பில்லாத அலங்காரத் தாவரங்களை அதற்கு பதிலாக இடுங்கள் (உதாரணமாக உண்ணாட்டு வாட்டல்கள் அல்லது கிரெவில்லாஸ்).

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களைப் பரவச் செய்யாதீர்கள்

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்களைப் பரவச்செய்யாமல் இருக்க சிறந்த வழி வீட்டுத் தோட்டத்தில் காய்த்த பழ ஈயின் பாதிப்புள்ள மரக்கறிகளையும் பழங்களையும் வேறு இடங்களுக்கு கொண்டுச்செல்லாமல் இருப்பதேயாகும்.

குயின்ஸ்லாந்தின் பழ ஈக்கள் பரவியில்லாத பிரதேசங்களுக்கு உங்கள் தாவர உற்பத்திகளால் பரவுமாயின் அதற்கான அபராதங்களை நீங்கள் செலுத்த நேரிடலாம் – இதனைப் பாருங்கள் Australian interstate quarantine

Queensland fruit flyஎனும் வலைத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலமோ 136 186 எனும் தொலைபேசியின் இலக்கத்தில் அழைப்பதன் மூலமோ நீங்கள் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விக்டோரியாவின் தொழில் திணைக்களம், பிரிஸிங்ட் மற்றும் வலயங்கள், இலக்கம் 1 ஸபிறிங் வீதி, மெல்பர்ன் -இல் மார்ச் மாதம் 2020 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

© விக்டோரியாவின் தொழில் திணைக்களம், பிரிஸிங்ட் மற்றும் வலயங்கள் 2020

Page last updated: 06 Jan 2025